திருப்பாவையில் வரும் திருமாலின் திவ்யநாமங்கள்

ஒரு முறை திருப்பாவை அநுசந்திப்பதன் மூலம், கீழே உள்ள எம்பெருமானின் பற்பல நாமசங்கீர்த்தனத்தை நாம் பாடுகின்றோம். திருப்பாவையை நித்யமும் (தினமும்) அநுசந்தித்தால் அவன் திருநாமத்தைப் பாடி நம் கர்ம வினைகளைப் போக்கி அவன் பொற்பாதங்களை விரைவில் அடையலாம். குழந்தையாய் குழந்தைகளுக்கும் எளிதில் பாடும் வண்ணம் கோதா தேவி நமக்கு கொடுத்த அமுதை பருகி எம்பெருமானின் திருவடிகளை அடைவோம்.

நந்தகோபன் குமரன்
யசோதை இளம்சிங்கம்
கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணன் (3 முறை)
பையத்துயின்ற பரமன்
ஓங்கி உலகளந்த உத்தமன் (3 முறை)
ஆழிமழைக்கண்ணன்
பற்பநாபன்
மாயன் (3 முறை)
வடமதுரை மைந்தன்
யமுனைத்துறைவன்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
தாமோதரன்
அரி
கேசவன் (2 முறை)
தேவாதி தேவன்
மாதவன் (2 முறை)
வைகுந்தன்
முகில் வண்ணன்
மனத்துக்குக்கினியான்
அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக்கண்ணன்
மாற்றழிக்க வல்லான்
மணிவண்ணன் (2 முறை)
மலர் மார்பன்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
அங்கண் மாஞாலத்து அரசர்
பூவைப் பூவண்ணன்
தென் இலங்கை செற்றவன்
பொன்ற சகடம் உதைத்தவன்
கன்று குணில் எறிந்தான்
குன்று குடையாய் எடுத்தவன்
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன்
நெடுமால்
கோவிந்தன் (3 முறை)
திருமால்

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம: