Design a site like this with WordPress.com
Get started

குணாநுபவம்

  • ஸர்வலோக சரண்யனின் வ்ரதம்

    சரணாகதியே மோக்ஷத்திற்க்கான சிறந்த உபாயம் என்றும் அந்தச் சரணாகதியை அநுஷ்டிக்க அந்தணர், அந்தியர், எல்லையில்நின்ற அனைத்துலகும் நொந்தவர் என அனைவரும் உரியவர்களே என்றும் ஸ்வாமி தேசிகன் தாமருளிய பல ஸ்ரீஸூக்திகளில் நிர்தாரணம் பண்ணுகிறார். அவற்றுள் ப்ரதான ஸூக்தியான “ஸ்ரீ சரணாகதி தீபிகா”வில் எம்பெருமான் ஸ்ரீராமனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு விளக்கொளிபெருமாளிடம் ப்ரபத்தியை விண்ணப்பிக்கிறார். யம் பூர்வமாச்ரிதஜநேஷு பவாந் யதாவத் தர்மம் பரம் ப்ரணிஜகௌ ஸ்வயமாந்ருசம்ஸ்யம் | ஸம்ஸ்மாரிதஸ்த்வமஸி தஸ்ய சரண்யபாவாத் நாத த்வதாத்தஸமயா நநு மாத்ருசார்தம் ||… Continue reading

  • குற்றம் அறியாத கோவலனார்

    ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் நமக்கு உண்டாகும் விபரீத ஞானமானது நம் லக்ஷணத்துக்கு விரோதமாய், எம்பெருமானிடத்தில் பலவித தோஷங்களைச் செய்வித்து அவனிடத்தில் மீண்டும் மீண்டும் மிகுந்த அபசாரப்படவைக்கிறது. இது அவனுக்கு நம்மீது மிகுந்த சீற்றத்தை உண்டு பண்ணுமே என்ற பீதி உண்டாகும். ஆனால் சரணடைந்த ஆச்ரிதர்கள் விஷயத்தில் அவன்தான் “அவிஜ்ஞாதா(அறியாதவன்)”வாயிற்றே. ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறியாத பதமென்று ஒன்றிருக்குமோ? எம்பெருமானை ஸர்வஜ்ஞாதா என்றழைப்பது அல்லவோ பொருந்தும். அப்படியிருக்க இங்கு அறியாதவன் என்று எதனைச் சொல்லிற்று? இது, எம்பெருமான் தன்னளவிலே ஆச்ரிதர்கள் எத்தனை… Continue reading

  • எம்பெருமானுக்கு எப்படி, எதனைக் கொண்டு ஆராதிக்க வேண்டும்?

    எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டுமென்கிற அவா அநேகமான சேதனர்களிடத்தில் இருப்பினும் அவனை ஆராதிக்கப் புகுமிடத்தில் எந்தவொரு குறையுமில்லாமல் அவனை ஆராதிக்க வேண்டுமே என்கிற அவர்களின் எண்ணமானது கைங்கர்யத்திற்குத் தடையாய் இருக்கிறது. அவன் அவாப்தஸமஸ்தகாமன், நாமோ நீசர்கள்; நீசமான உபகரணங்களைக் கொண்டு அவனை எவ்வாறு ஆச்ரயித்துத் தலைகட்டுவது?அப்படியே செய்தாலும் பரமபதநாதனுக்கு அது பாங்காயிருக்குமோ என்று ஐயங்கொண்டு அவனை விட்டுப் பலர் விலகப் பார்ப்பதுண்டு. ஸ்வாமி நம்மாழ்வார் ஸாதிக்கிறார்: பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல்  உறுவீர் பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும்… Continue reading

  • இளையபெருமாள் காட்டிய அநந்யார்ஹ சேஷத்வம்

    பஞ்சவடியில் பர்ணசாலை அமைக்கும்பொழுது, எம்பெருமான் ஸ்ரீராமன் கட்டளையிடுகிறான்:  ரமதே யத்ர வைதேஹீ த்வமஹம் சைவ லக்ஷ்மண | தாத்ருசோ த்ருஷ்யதாம் தேச: ஸந்நிக்ருஷ்டஜலாசய: || ஆரண்யகாண்டம் 15-4 வநராமண்யகம் யத்ர ஜலராமண்யகம் ததா | ஸந்நிக்ருஷ்டம் ச யத்ர ஸ்யாத்ஸமித்புஷ்பகுசோதகம் || ஆரண்யகாண்டம் 15-5 “லக்ஷ்மணா! நீர்நிலை அருகில் இருக்கக் கூடியதும், எந்த இடத்தில் சீதை மகிழ்ச்சியாக இருப்பாளோ, அதேபோல் நீயும் நானும் உகப்புடன் இருப்போமோ, அப்படிப்பட்டதான ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடி. அந்த இடம் மரங்கள்… Continue reading

  • எம்பெருமானிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வம்!

                                   त्वयि प्रवृत्ते मम किं प्रयासैस्त्वय्यप्रवृत्ते मम किं प्रयासैः அஷ்டபுஜாஷ்டகம் – 6 அழகான இந்த இரண்டு வரிகள் மூலம் நம் அநந்யகதித்வத்தையும் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிடம் நமக்குள்ள அநந்ய உபாயத்வத்தையும் ஒரு சேர தலைக்கட்டுகிறார் ஸ்வாமி தேசிகன். ஒருவனுக்கு கைகொடுப்பேன் என்று எம்பெருமான் ஸங்கல்பிக்குமளவில் அவன் ஸ்வதந்த்ரமாக எடுக்கும் முயற்சியினாலோ பிற தேவதைகளை ஆச்ரயிப்பதாலோ ஒரு பயன் உண்டோ? அவன்ஒருவனை ரக்ஷிக்கமுடியாது என்று ஸங்கல்பித்தபின்… Continue reading

  • தேனே மலரும் திருப்பாதம்!

    அந்நாளில் த்ரிவிக்ரமனாய் உயர்ந்து மூவுலகையும் அளந்து தன் சர்வசக்தித்வத்தை நிர்தாராணம் பண்ணினான் பெருமான். அவ்வல்லமையைக் கண்டு மோஹித்த  ஆண்டாள் ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமான், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்று அவன் திருவடியின் மேன்மையை திருப்பாவையில் மீண்டும் மீண்டும் அநுபவிக்கிறாள். ஸ்வாமி நம்மாழ்வாரோ “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று அடியவர்களை ஆட்கொண்டு ரக்ஷிக்க எம்பெருமான் உபாயமாக தன் திருவடியையே தந்தருளுகிறான் என்று அத்திருவடி தொழுதெழுகிறார். வானவர்களின் தலையை அலங்கரிக்கும்… Continue reading

  • விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

     பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே” என்றபடி ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து இ(ற)ரங்கி வந்து, ஸ்ரீநிவாஸனாக திருமலையில் நித்யவாஸம் செய்கிறான். அப்பெருமானின் பிரிவைப் பொறுக்க மாட்டாது நித்யரும் கூட தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து அவனுக்கு நித்யகைங்கர்யங்கள் பண்ணுகின்றனர். கண்ணாவான் என்றும், மண்ணோர்விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே… Continue reading

  • உனக்குரியனாய மைந்தன் உய்ந்தான்!

    ஆளரியாய் திருவவதரித்த நரசிங்கனுக்கு ஆச்ரிதர்கள் மேலுள்ள பக்ஷபாதம் தான் எத்துணை?  அடியார்களை எப்படிக் காப்பது என்று சதா சர்வ காலமும் சிந்தனை செய்வதற்காகவேயன்றோ பெருமான் இப்பூவுலகில் பல க்ஷேத்ரங்களில் பர்யங்க பங்கத்தில் யோகாந்ருஸிம்ஹணாக வீற்றிருக்கிறான்! குழந்தை ப்ரஹ்லாதனை அவன் தந்தை செய்யும் ஹிம்சைகளிலிருந்து காக்க வேண்டும். இரணியானால் சிறைவைக்கப்பட்ட ஞானிகளையும் மஹான்களையும் விடுவிக்கவேண்டும். தேவர்களையும் வேதத்தையும் அக்கொடூரனிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். எம்பெருமானுக்கு பரமபதத்தில் இருப்பு கொள்ளவில்லை. இமையோர் தலைவன் ஒரு குழந்தை அழைத்தா வரப்போகிறான் என்ற இறுமாப்பு இரணியனுக்கு. குழந்தை ப்ரஹ்லாதன்… Continue reading

  • கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்

    எம்பெருமானின் பரத்வத்தையயும் ஸ்வாமித்வத்தையும் திருவாய்மொழியில் அநுபவித்துக் கொண்டு வந்த ஸ்வாமி நம்மாழ்வார் ஆயர்குலத்துக்குச் சுலபனாயும் அவனை அறியாத கம்ஸ, துரியோதனாதிகளுக்கு அரியனாயும் திருவவதரித்த கண்ணபிரானின் மேன்மையையும் எளிமையையும் எண்ணி உள்ளம் உருகி கரைந்து எத்திறம்! எத்திறம் என்று பல மாதங்கள் மோஹித்துக்கிடந்தார்.  பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கரிய  வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு எத்திறம்! உரலினொடு இணைந்திருந்தேங்கிய எளிவே திருவாய்மொழி 1-3-1 வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்