ஆசார்யன் திருவடிகளே சரணம்

அதிசயம் பல புரிந்து

ஆச்சரியங்கள் பல நிகழ்த்தி,

அனுக்ரஹம் செய்வாரடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி

இன்னல்கள் யாவும் தீர்த்து

ஈகை குணத்தை அளித்து

இன்பத்தை தருவாரடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி கிளியே

உள்ளத்தில் கோயில் கொண்டு

ஊனத்தை களைத்து விட்டு

உயிராய் நிற்பாரடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி

எம்பெருமானை காட்டி தந்து

ஏழையாம் நமக்குதவி

ஏணியாய் நிற்பாரடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி

ஐயம் இனி கொள்ள வேண்டாம்

ஒதுங்கிடுவோம் அவர் பாதத்தில் இனி

ஓங்கிய வாழ்வளிப்பாரடி கிளியே

அஃதல்லவோ நம் ஆசார்யனடி கிளியே

அவர் நம் ஆசார்யனடி.

வியாக்யா.