Design a site like this with WordPress.com
Get started

நம்மாழ்வார்

  • காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்

    ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை… Continue reading

  • எம்பெருமானுக்கு எப்படி, எதனைக் கொண்டு ஆராதிக்க வேண்டும்?

    எம்பெருமானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டுமென்கிற அவா அநேகமான சேதனர்களிடத்தில் இருப்பினும் அவனை ஆராதிக்கப் புகுமிடத்தில் எந்தவொரு குறையுமில்லாமல் அவனை ஆராதிக்க வேண்டுமே என்கிற அவர்களின் எண்ணமானது கைங்கர்யத்திற்குத் தடையாய் இருக்கிறது. அவன் அவாப்தஸமஸ்தகாமன், நாமோ நீசர்கள்; நீசமான உபகரணங்களைக் கொண்டு அவனை எவ்வாறு ஆச்ரயித்துத் தலைகட்டுவது?அப்படியே செய்தாலும் பரமபதநாதனுக்கு அது பாங்காயிருக்குமோ என்று ஐயங்கொண்டு அவனை விட்டுப் பலர் விலகப் பார்ப்பதுண்டு. ஸ்வாமி நம்மாழ்வார் ஸாதிக்கிறார்: பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல்  உறுவீர் பிரிவகையின்றி நன்னீர்தூய் புரிவதுவும்… Continue reading

  • விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு

     பரமபதத்திலே கைங்கர்யஸாம்ராஜ்யத்துக்கு அதிபதியாய் இருப்பினும் தன் பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு தன்னைச் சரணடையும் சேதனர்களின் மேல் கொண்ட பக்ஷபாதத்தினால் தயையே திருவுள்ளமாய், அவர்கள் பற்றுவதற்கு ஹேதுவாய் “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே” என்றபடி ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து இ(ற)ரங்கி வந்து, ஸ்ரீநிவாஸனாக திருமலையில் நித்யவாஸம் செய்கிறான். அப்பெருமானின் பிரிவைப் பொறுக்க மாட்டாது நித்யரும் கூட தேஸோசிதமான தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து அவனுக்கு நித்யகைங்கர்யங்கள் பண்ணுகின்றனர். கண்ணாவான் என்றும், மண்ணோர்விண்ணோர்க்கு, தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே… Continue reading

  • கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்

    எம்பெருமானின் பரத்வத்தையயும் ஸ்வாமித்வத்தையும் திருவாய்மொழியில் அநுபவித்துக் கொண்டு வந்த ஸ்வாமி நம்மாழ்வார் ஆயர்குலத்துக்குச் சுலபனாயும் அவனை அறியாத கம்ஸ, துரியோதனாதிகளுக்கு அரியனாயும் திருவவதரித்த கண்ணபிரானின் மேன்மையையும் எளிமையையும் எண்ணி உள்ளம் உருகி கரைந்து எத்திறம்! எத்திறம் என்று பல மாதங்கள் மோஹித்துக்கிடந்தார்.  பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கரிய  வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு எத்திறம்! உரலினொடு இணைந்திருந்தேங்கிய எளிவே திருவாய்மொழி 1-3-1 வெண்ணெய் களவு செய்கிற தன்னை யசோதைப்பிராட்டி அடிக்கடி… Continue reading

  • இந்நின்ற நீர்மை இனியாம் உறாமல் உயிர் அளிப்பான் பெருமான்

    “பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்ற ஸ்வாமி மதுரகவியாழ்வார் திருவாக்குப்படி தம் அருளிச்செயல்கள் மூலம் தீர்ந்த அடியவர்களைத் திருத்தி எம்பெருமானிடத்தில் பணிகொள்ள வைப்பதையே ஸ்வாமி நம்மாழ்வார் தன் திருவவதார வைபவத்தின் தலையாய கர்தவ்யமாகக் கொண்டார்.  ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது ஆழ்வார் திருவுள்ளத்திற்க்கு எவ்வளவு அஸஹ்யமாய் இருக்கிறதென்பதை தன் முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்தின் மூலம் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானிடம் “தேவரீரை அநுபவிக்கைக்கு விரோதியான தேஹசம்பந்தத்தைப் போக்கியருள… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்