Design a site like this with WordPress.com
Get started

ஆசார்யர்கள்

 • எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு

  எம்பெருமானிடத்தில் நாம் செய்யும் களவு

  ஒரு பொருளை உடையவனின் ஜ்ஞானமும் அனுமதியும் இல்லாமல் எடுத்து வந்து அதை எந்த வித ஸங்கோசமுமின்றி அது நம்முடையது என்கிற பாவத்தில் உபயோகிப்பதே களவு எனப்படும். எம்பெருமான் தங்கள் இதயத்தை களவு கொண்டு போனதாக பராங்குச-பரகால நாயகிகள் அலற்றுவதை நாம் பல பாசுரங்களில் அநுபவித்து இருக்கிறோம். ஸ்வாமி தேசிகனோ இங்கே வேறொரு விதமான, ஒரு நூதனமான திருட்டைப் பற்றிப் பேசுகிறார். அவர் கூற்றுப்படி நாம் அனைவரும் திருடர்களே. நாமும் ஒரு பொருளை திருடிக்கொண்டு வந்து எந்தவித வெட்கமோ … Continue reading

 • எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே

  ஜீவர்களாகிய நாம் அநாதியான கர்மப்ரவாஹத்தாலும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலும் ஸம்ஸாரம் என்னும் கொடியதானதொரு பாலை நிலத்தில் கிடந்து உழல்கின்றோம். ப்ரக்ருதி ஸம்பந்தம் விரோதம் மட்டுமல்லாமல் அற்பமானது, “மின்னின் நிலையில, மன்னுயிர் ஆக்கைகள்” என்று அலற்றுகிறார் ஆழ்வார். ஸ்வாமி தேசிகனோ இந்த ஸம்பந்தத்தினால் துன்புற்றுழலும் சேதனர்களை “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போற் பிறவிக் கடலுள் நின்று துளங்குகின்றவர்” என்கிறார். அந்த ஸம்பந்தத்தை ஒழித்து, எம்பெருமானிடம் பிறப்பின்மை வேண்டி மோக்ஷம் அடையப் ப்ரார்த்திப்பதே சேதனர்களின் ஸ்வரூபத்திற்குப் பாங்கு. “பாலேபோல் சீரில்… Continue reading

 • கண்ணனுக்கும் எம்பெருமானாருக்கும் சிலேடை

  ஸ்ரீ யதிராஜஸப்ததியின் 13ம் ஸ்லோகத்தில் ஸ்வாமி ராமாநுஜருக்கும் எம்பெருமான் கண்ணனுக்கும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக திருவவதரித்தான் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன். ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ஸ்வப₃லாது₃த்₃த்₄ருதயாத₃வப்ரகாஶ: |அவரோபிதவாந் ஶ்ருதேரபார்தா₂ந்நநு ராமாவரஜ꞉ ஸ ஏஷ பூ₄ய꞉ || ஸ்ரீ யதிராஜஸப்ததி -13 “மைந்நம்பு வேல்கண் நல்லாள்முன்னம் பெற்ற வளைவண்ணம் நன்மாமேனி, தன்நம்பி நம்பி” என்றபடி கண்ணபிரான் பலராமனுக்கு தம்பியாதலின் ராமாநுஜன் என்ற திருநாமம் கொண்டான். ஜகதாசார்யரான ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ராமாநுஜர் என்ற திருநாமம் ப்ரஸித்தம்.  ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ கண்ணன்‌,… Continue reading

 • வேங்கடநாதன் அநுபவித்த பரமபதநாதனின் சுநாதங்கள்

  கேட்கப்படுவது எதுவோ அதுவே ஶ்ருதி. அபௌருஷேயங்களான வேதத்தைச் ஶ்ருதி எனவும் கூறுவர். இன்றளவும் வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி காதால் கேட்டறிந்து ஶ்ரவணம் செய்தே தலைமுறை தலைமுறையாக அநுஸந்தித்து வருகிறோம். கடலுக்குள்ளே முத்துக்கள், பவளங்கள் மற்றும் ரத்னங்கள் போன்ற எண்ணற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுபோல பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் என்னும் திருக்கல்யாணகுணங்களின் கடலுள் மறைகள் மறைந்திருக்கின்றன. அம்மறையின் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான் பெருமான். அதனாலேயே அவனுக்கு ஶ்ருதிஸாகரன் என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது.  தாம்… Continue reading

 • கங்கையிற்புனிதமாய காவிரி

  திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். அவன் கருணைக் கடல். எண்ணிலடங்கா திருக்கல்யாண குணங்கள் ஸங்கமித்துள்ள மஹாஸமுத்ரம். ஸாகரம் போன்று நீண்டு, பரந்து விரிந்துள்ள அவனது பெருமைகளை எவ்வளவு முயற்சித்தாலும் பேசித் தலைக்கட்ட முடியாது.  தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென்றெண்ணி தீர்த்தனுக்கே தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன்சொன்ன தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களைத் தேவர்வைகல் தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே. திருவாய்மொழி 7-10-11 என்று ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை தீர்த்தன் என்றும் அவன் விஷயமாக தாம் அருளிய ஒவ்வொரு பாசுரங்களையும் தீர்த்தங்கள் என்று ஸாதிக்கிறார்.  ஜீவன்கள் அகத்தூய்மையைப் பெற்று ஸம்ஸாரம்… Continue reading

 • காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்

  ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை… Continue reading

 • ஸர்வலோக சரண்யனின் வ்ரதம்

  சரணாகதியே மோக்ஷத்திற்க்கான சிறந்த உபாயம் என்றும் அந்தச் சரணாகதியை அநுஷ்டிக்க அந்தணர், அந்தியர், எல்லையில்நின்ற அனைத்துலகும் நொந்தவர் என அனைவரும் உரியவர்களே என்றும் ஸ்வாமி தேசிகன் தாமருளிய பல ஸ்ரீஸூக்திகளில் நிர்தாரணம் பண்ணுகிறார். அவற்றுள் ப்ரதான ஸூக்தியான “ஸ்ரீ சரணாகதி தீபிகா”வில் எம்பெருமான் ஸ்ரீராமனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு விளக்கொளிபெருமாளிடம் ப்ரபத்தியை விண்ணப்பிக்கிறார். யம் பூர்வமாச்ரிதஜநேஷு பவாந் யதாவத் தர்மம் பரம் ப்ரணிஜகௌ ஸ்வயமாந்ருசம்ஸ்யம் | ஸம்ஸ்மாரிதஸ்த்வமஸி தஸ்ய சரண்யபாவாத் நாத த்வதாத்தஸமயா நநு மாத்ருசார்தம் ||… Continue reading

 • பச்சையிட்டுத் திருத்திப் பணிகொண்ட மணக்கால் நம்பி

  திருநக்ஷத்ரம்: மாசி மகம் அவதார ஸ்தலம்: மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே இருக்கும் கிராமம்) ஆசார்யன்: உய்யக்கொண்டார் ஸ்வாமி உய்யக்கொண்டாரின் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்களுள் ப்ரதானமானவர் மணக்கால்நம்பி. இவர் இயற்பெயர் ஸ்ரீராமமிஶ்ரர். இவர் பன்னிரண்டு வருடங்கள் உய்யக்கொண்டார் திருவடிகளில் ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு வந்தார். உய்யக்கொண்டார் தேவிகள் பரமபதிக்க அவருடைய திருமாளிகைக் கைங்கர்யங்கள் அனைத்தையும் தாமே செய்து வந்தார் ஸ்ரீராமமிஶ்ரர். ஒருநாள் உய்யக்கொண்டாருடைய சிறுமிகள் இருவரையும் நீராட்டி அழைத்து வருகையில் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பது கண்டு அதைத் தாண்ட முடியாமல்… Continue reading

 • ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் “நம்பையல்” ஆன வைபவம்

  திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீர்ஷம் அவதார வருஷம்: ஸௌம்ய வருஷம் (கி.பி. 1009) அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி (தற்போது பூந்தமல்லி) இயற்பெயர்: கஜேந்திர தாஸர் ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் அருளினது: காஞ்சி தேவப்பெருமாள் விஷயமாக “தேவராஜ அஷ்டகம்” கைங்கர்யம்: காஞ்சி தேவப்பெருமாளுக்குத் திருவாலவட்ட கைங்கர்யம். சிறப்பு: வரதனும் பெருந்தேவித் தாயாரும் தங்கள் அர்ச்சை நிலையைத் தாண்டி இவருடன் வார்த்தை உரையாடுவார்கள். திருக்கச்சி நம்பிகள் மூலமாக எம்பெருமானாருக்கு தேவப்பெருமாள் அருளிய 6 வார்த்தைகள் அனைவரும் அறிந்ததே. நம்பையல் ஆன… Continue reading

 • குற்றம் அறியாத கோவலனார்

  ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் நமக்கு உண்டாகும் விபரீத ஞானமானது நம் லக்ஷணத்துக்கு விரோதமாய், எம்பெருமானிடத்தில் பலவித தோஷங்களைச் செய்வித்து அவனிடத்தில் மீண்டும் மீண்டும் மிகுந்த அபசாரப்படவைக்கிறது. இது அவனுக்கு நம்மீது மிகுந்த சீற்றத்தை உண்டு பண்ணுமே என்ற பீதி உண்டாகும். ஆனால் சரணடைந்த ஆச்ரிதர்கள் விஷயத்தில் அவன்தான் “அவிஜ்ஞாதா(அறியாதவன்)”வாயிற்றே. ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறியாத பதமென்று ஒன்றிருக்குமோ? எம்பெருமானை ஸர்வஜ்ஞாதா என்றழைப்பது அல்லவோ பொருந்தும். அப்படியிருக்க இங்கு அறியாதவன் என்று எதனைச் சொல்லிற்று? இது, எம்பெருமான் தன்னளவிலே ஆச்ரிதர்கள் எத்தனை… Continue reading

Recent Posts

அம்ருதரஞ்சனி அம்ருதாஸ்வாதினி அர்ச்சாவதாரம் ஆராதனை இராமானுஜ நூற்றந்தாதி இராமாயணம் இளையபெருமாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு காவேரி கைங்கர்யம் சரணாகதி தீபிகா திருமலை திருவாய்மொழி திருவிருத்தம் திருவேங்கடவன் திவ்யப்ரபந்தம் தேசிகஸ்தோத்ரம் தேவநாயக பஞ்சாசத் தேவப்பெருமாள் நம்பையல் ந்யாஸதசகம் ந்ருஸிம்ஹன் ராமாயணம் வரதராஜஸ்தவம் ஸ்ரீ தேஹளீச ஸ்துதி ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீ யதிராஜஸப்ததி ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்