கண்ணனுக்கும் எம்பெருமானாருக்கும் சிலேடை

ஸ்ரீ யதிராஜஸப்ததியின் 13ம் ஸ்லோகத்தில் ஸ்வாமி ராமாநுஜருக்கும் எம்பெருமான் கண்ணனுக்கும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தி கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக திருவவதரித்தான் என்று நிர்தாரணம் பண்ணுகிறார் ஸ்வாமி தேசிகன். ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ஸ்வப₃லாது₃த்₃த்₄ருதயாத₃வப்ரகாஶ: |அவரோபிதவாந் ஶ்ருதேரபார்தா₂ந்நநு ராமாவரஜ꞉ ஸ ஏஷ பூ₄ய꞉ || ஸ்ரீ யதிராஜஸப்ததி -13 “மைந்நம்பு வேல்கண் நல்லாள்முன்னம் பெற்ற வளைவண்ணம் நன்மாமேனி, தன்நம்பி நம்பி” என்றபடி கண்ணபிரான் பலராமனுக்கு தம்பியாதலின் ராமாநுஜன் என்ற திருநாமம் கொண்டான். ஜகதாசார்யரான ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ராமாநுஜர் என்ற திருநாமம் ப்ரஸித்தம்.  ஶமிதோத₃யஶங்கராதி₃க₃ர்வ꞉ கண்ணன்‌, … Continue reading “கண்ணனுக்கும் எம்பெருமானாருக்கும் சிலேடை”

வேங்கடநாதன் அநுபவித்த பரமபதநாதனின் சுநாதங்கள்

கேட்கப்படுவது எதுவோ அதுவே ஶ்ருதி. அபௌருஷேயங்களான வேதத்தைச் ஶ்ருதி எனவும் கூறுவர். இன்றளவும் வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், வாயால் சொல்லி காதால் கேட்டறிந்து ஶ்ரவணம் செய்தே தலைமுறை தலைமுறையாக அநுஸந்தித்து வருகிறோம். கடலுக்குள்ளே முத்துக்கள், பவளங்கள் மற்றும் ரத்னங்கள் போன்ற எண்ணற்ற விலைமதிப்பில்லாத செல்வங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுபோல பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் என்னும் திருக்கல்யாணகுணங்களின் கடலுள் மறைகள் மறைந்திருக்கின்றன. அம்மறையின் காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறான் பெருமான். அதனாலேயே அவனுக்கு ஶ்ருதிஸாகரன் என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது.  தாம் … Continue reading “வேங்கடநாதன் அநுபவித்த பரமபதநாதனின் சுநாதங்கள்”

பெண்ணை ஆற்றங்கரைக் கரும்பு

இடம் : திருக்கோவலூர்  வைபவம்: இடைகழியில் முதலாழ்வார்கள் ஏற்றிவைத்த விளக்கு ஸ்லோகம்: தேஹளீச ஸ்துதி முதலாழ்வார்களின் திருக்கோவலூர் வைபவம் அனைவரும் அறிந்ததே. இவ்வைபவத்தை ஸ்வாமி தேசிகன் “ஸ்ரீ தேஹளீச ஸ்துதி”யில் கவி நயத்துடன் கொண்டாடுகிறார். அதில் ஒரு ஸ்லோகம்: காஸாரபூர்வகவிமுக்யவிமர்த்தஜந்மா பண்ணாதடேக்ஷூஸுபகஸ்ய ரஸோ பஹூஸ்தே | த்வத்பாதபத்மமதுநி த்வதநந்யபோக்யே நூநம்‌ ஸமாச்ரயதி நூதநசர்க்கராத்வம்‌ || ஸ்ரீ தேஹளீச ஸ்துதி – 7 “ஆற்றின் கரையில் பயிராகிச் செழித்த கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து எடுக்கும் சாறானது மிக … Continue reading “பெண்ணை ஆற்றங்கரைக் கரும்பு”

கங்கையிற்புனிதமாய காவிரி

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ளான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன். அவன் கருணைக் கடல். எண்ணிலடங்கா திருக்கல்யாண குணங்கள் ஸங்கமித்துள்ள மஹாஸமுத்ரம். ஸாகரம் போன்று நீண்டு, பரந்து விரிந்துள்ள அவனது பெருமைகளை எவ்வளவு முயற்சித்தாலும் பேசித் தலைக்கட்ட முடியாது.  தீர்த்தனுக்கற்றபின் மற்றோர்சரணில்லையென்றெண்ணி தீர்த்தனுக்கே தீர்த்தமனத்தனனாகிச் செழுங்குருகூர்ச்சடகோபன்சொன்ன தீர்த்தங்களாயிரத்துள் இவைபத்தும்வல்லார்களைத் தேவர்வைகல் தீர்த்தங்களேயென்றுபூசித்துநல்கியுரைப்பர் தம்தேவியர்க்கே. திருவாய்மொழி 7-10-11 என்று ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை தீர்த்தன் என்றும் அவன் விஷயமாக தாம் அருளிய ஒவ்வொரு பாசுரங்களையும் தீர்த்தங்கள் என்று ஸாதிக்கிறார்.  ஜீவன்கள் அகத்தூய்மையைப் பெற்று ஸம்ஸாரம் … Continue reading “கங்கையிற்புனிதமாய காவிரி”

காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்

ஸம்ஸார பந்தத்தில் கட்டுண்டு ஜீவன்கள் படும் அவஸ்த்தையானது கண்டு இமையோர் தலைவனுக்குப் பொறுக்கமுடியவில்லை. அவர்களைத் துன்பத்திலிருந்து உய்விக்க இராமனாகவும் கண்ணனாகவும் அவர்கள் மத்தியிலேயே அவதரித்து, அவர்களைத் திருத்திப் பணிகொள்ளப் பார்த்தான். இருப்பினும் அவர்கள் திருந்தவில்லை. பின்பு விஷ்வக்ஸேநரிடம், “நான் லீலாவிபூதியிலுள்ள உயிர்களை உஜ்ஜீவிப்பதற்காகப் பல வகையான யோனிகளில் அவதரித்து அவர்களுடன் கலந்து பரிமாறி, அவர்களை நல்வழிப் படுத்த முயன்றும் அவர்களுடைய அஜ்ஞானம் நீங்க வழியில்லை. கர்ம வாஸனையால் ஸம்ஸாரமென்னும் இருளில் இருந்துகொண்டு என்னை நினைக்காமலும் மோக்ஷத்திற்க்காக என்னை … Continue reading “காசினியோர்தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்த வள்ளல்”

ஆழ்வார்கள் அவதார வைபவத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில் எம்பெருமானின் வழிபாட்டுக்கு விரோதமாய் உள்ளவர்கள், அமைதியை இழந்தவர்கள், எம்பெருமானின் நாமங்கள், ரூபங்கள் மற்றும் அவனை அடைவதற்கான உபாயங்கள் ஆகியவற்றை போதனை செய்து வருகிறார். அப்பொழுது ஸாதிக்கிறார்:  க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ்  இச்சந்தி ஸம்பவம் | கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: | க்வசித் க்வசின்  மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38. தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ | … Continue reading “ஆழ்வார்கள் அவதார வைபவத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம்”

ஸர்வலோக சரண்யனின் வ்ரதம்

சரணாகதியே மோக்ஷத்திற்க்கான சிறந்த உபாயம் என்றும் அந்தச் சரணாகதியை அநுஷ்டிக்க அந்தணர், அந்தியர், எல்லையில்நின்ற அனைத்துலகும் நொந்தவர் என அனைவரும் உரியவர்களே என்றும் ஸ்வாமி தேசிகன் தாமருளிய பல ஸ்ரீஸூக்திகளில் நிர்தாரணம் பண்ணுகிறார். அவற்றுள் ப்ரதான ஸூக்தியான “ஸ்ரீ சரணாகதி தீபிகா”வில் எம்பெருமான் ஸ்ரீராமனின் சரணாகதரக்ஷண வ்ரதத்தை முன்னிட்டுக்கொண்டு விளக்கொளிபெருமாளிடம் ப்ரபத்தியை விண்ணப்பிக்கிறார். யம் பூர்வமாச்ரிதஜநேஷு பவாந் யதாவத் தர்மம் பரம் ப்ரணிஜகௌ ஸ்வயமாந்ருசம்ஸ்யம் | ஸம்ஸ்மாரிதஸ்த்வமஸி தஸ்ய சரண்யபாவாத் நாத த்வதாத்தஸமயா நநு மாத்ருசார்தம் || … Continue reading “ஸர்வலோக சரண்யனின் வ்ரதம்”

வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது!

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி 10-8 மாற்றமுளவாகிலும், 7வது பாசுரம்: வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்  நான் பின்னும் உன் சேவடியன்றி நயவேன்  தேம்பலிளந்திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப் பாம்பினணைப்பள்ளிக் கொண்டாய் பரஞ்சோதீ பொருளுறை: “க்ஷயரோகத்தால் மெலிவுற்ற யுவாவான சந்திரனுக்கு க்ஷயரோகத்தைப் போக்கியருளின, ஐந்து முகங்களையுடைய, ஸர்பத்தின் உடலான படுக்கையில் ஸயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதனே! ஸர்வேஸ்வரனாய் மிக்க ப்ரகாஸமானவனே! வேப்பமரத்திலே பிறந்திருக்கும் புழு கசப்பான வேம்பை விட்டு வேறொன்றை உண்ணுவதில்லை. அதுபோல அடியேன் உனக்கே தாஸனாய், உனது அழகிய திருவடிகளை … Continue reading “வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது!”

பச்சையிட்டுத் திருத்திப் பணிகொண்ட மணக்கால் நம்பி

திருநக்ஷத்ரம்: மாசி மகம் அவதார ஸ்தலம்: மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே இருக்கும் கிராமம்) ஆசார்யன்: உய்யக்கொண்டார் ஸ்வாமி உய்யக்கொண்டாரின் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்களுள் ப்ரதானமானவர் மணக்கால்நம்பி. இவர் இயற்பெயர் ஸ்ரீராமமிஶ்ரர். இவர் பன்னிரண்டு வருடங்கள் உய்யக்கொண்டார் திருவடிகளில் ஸர்வவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு வந்தார். உய்யக்கொண்டார் தேவிகள் பரமபதிக்க அவருடைய திருமாளிகைக் கைங்கர்யங்கள் அனைத்தையும் தாமே செய்து வந்தார் ஸ்ரீராமமிஶ்ரர். ஒருநாள் உய்யக்கொண்டாருடைய சிறுமிகள் இருவரையும் நீராட்டி அழைத்து வருகையில் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பது கண்டு அதைத் தாண்ட முடியாமல் … Continue reading “பச்சையிட்டுத் திருத்திப் பணிகொண்ட மணக்கால் நம்பி”

ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் “நம்பையல்” ஆன வைபவம்

திருநக்ஷத்ரம்: மாசி, ம்ருகசீர்ஷம் அவதார வருஷம்: ஸௌம்ய வருஷம் (கி.பி. 1009) அவதார ஸ்தலம்: பூவிருந்தவல்லி (தற்போது பூந்தமல்லி) இயற்பெயர்: கஜேந்திர தாஸர் ஆசார்யன்: ஆளவந்தார் சீடர்கள்: எம்பெருமானார் அருளினது: காஞ்சி தேவப்பெருமாள் விஷயமாக “தேவராஜ அஷ்டகம்” கைங்கர்யம்: காஞ்சி தேவப்பெருமாளுக்குத் திருவாலவட்ட கைங்கர்யம். சிறப்பு: வரதனும் பெருந்தேவித் தாயாரும் தங்கள் அர்ச்சை நிலையைத் தாண்டி இவருடன் வார்த்தை உரையாடுவார்கள். திருக்கச்சி நம்பிகள் மூலமாக எம்பெருமானாருக்கு தேவப்பெருமாள் அருளிய 6 வார்த்தைகள் அனைவரும் அறிந்ததே. நம்பையல் ஆன … Continue reading “ஸ்வாமி திருக்கச்சி நம்பிகள் “நம்பையல்” ஆன வைபவம்”

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Create your website with WordPress.com
Get started
%d bloggers like this: